Type Here to Get Search Results !

சொரிமுத்தையனார் கோயில், கல்யாணி தீர்த்தம்






    இத்தலத்துக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் சொரிமுத்தையனாரை தங்கள் குலதெய்வமாக வணங்குகின்றனர்.குழந்தை பாக்கியம் வேண்டுவோர், திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். பில்லி சூன்யம், செய்வினை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் அத்தகைய துன்பங்கள் நீங்குகிறது.கோர்ட் வழக்குகள், தீர்க்கப்படாத பிரச்சினைகள் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் வருகை தந்து வழிபடுகின்றனர். மேலும் இத்தலம் அமைந் துள்ள இடம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள இடமாக இருப்பதால் உடற்பிணிகள் நீங்குவதாகவும் சொல்கின்றனர்


இத்தலத்தின் மற்றொரு முக்கியமான பிரார்த்தனை சிறப்பம்சம் என்னவெனில் சபரிமலைக்கு செல்வோர் இத்தலத்தில் வந்து மாலைபோடுகின்றனர். இந்த மாலை போடுவதற்காக மட்டும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது முக்கிய சிறப்பு  நேர்த்தி கடன்,



வாலைப் பகடை சுவாமிக்கு செருப்பு காணிக்கையாக செலுத்தவது மிகவும் வித்தியாசமாக உள்ளது.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளை பக்தர்கள் செய்கின்றனர்.தங்கள் நேர்த்திகடனாக கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைக்கலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்

கோயிலின் சிறப்பம்சம்

இத்தலம் எந்தஅளவு சிறப்புமிக்கது என்பதை கீழ்கண்ட நிலைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஷேத்திரங்களின் ஆதார நிலை


நிலை : சிவன் : முருகன் : சாஸ்தா :மூலாதாரம்
 திருவாரூர் திருப்பரங்குன்றம் சொரிமுத்தையனார்

சுவாதிபுஷ்டானம் திருவானைக்கா திருச்செந்தூர் அச்சங்கோயில்

மணிபூரகம் திருவண்ணாமலை பழநி ஆரியங்காவு

விசுத்தி காளத்தி குன்றுதோருடல் பந்தளம்

ஆஞ்சை காசி பழமுதிர்சோலை சபரிமலை

பிரமந்திரம் கைலாசம் கதிர்காமம் காந்தமலை

தல பெருமைகள்அய்யப்பனின்  முதல் மூலாதாரக் கோயில்.

*ஜாதி வேறுபாட்டை நீக்க அய்யப்பன் 2 தாழ்த்தப்பட்ட பெண்களை முத்துபட்டன் என்ற மனித அவதாரமெடுத்து திருமணம் செய்து கொண்ட தலம்.

*பசு வளர்ப்பவர்கள் தங்கள் பசு அதிக பால் சுரக்காமல் இருந்தால் வழிபட்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

*பூதத்தாருக்கு மணி காணிக்கை தருவது வழக்கம்.

*அய்யப்பனின் முதல் கோயில் என்பதால் சபரி மலைக்கு மாலை போட விஷேசம்.

*பொதிகை மலையில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான கோயில்

தல வரலாறு :

முத்துப்பட்டர் என்ற பிராமணர் வட திசையில் வாழ்ந்து வந்த போது அவரது சகோதரர்கள் ராமாயணக் கதை பேசுகிறார்கள். அப்போது சகோதரர்கள் சீதைக்கு ராமர் என்ன உறவு எனக் கேட்க சித்தப்பன் என தவறாக முத்துப்பட்டர் சொல்லி விட முத்துபட்டரை சகோதரர்கள் அடித்து விடுகின்றனர்.அவர் தென்பொதிகை மலைக்கு வருகிறார்.அங்கு வாலைப்பகடை என்ற தாழ்த்தப்பட்டவர் வளர்த்து வரும் இரு பெண்களை சந்தித்து மனம் பறி கொடுக்கிறார். அவர்கள் இருவரையும் திருமணம் செய்ய ஜாதி ஒரு தடையாக இருப்பது கண்டு தானே தாழ்த்தப்பட்டவனாக மாறி திருமணம் செய்து கொள்கிறார்.முதலிரவன்று பசு திருடு போக அதை திருடியவர்களை தேடிப்போன இடத்தில் ஏற்பட்ட சண்டையில் முத்துப்பட்டர் கொல்லப்படுகிறார்.அதையறிந்த இரு மனைவியரும் அவருடனேயே மரணத்தை தழுவுகின்றனர்.முத்துப்பட்டரே சாஸ்தாவாக வந்ததாகவும் பின்பு அவரே சொரிமுத்தையனாராக எழுந்தருளியுள்ளதாக வரலாறு.திருவாங்கூர் சமஸ்தானம் வெளியிட்டுள்ள அய்யப்பன் வரலாற்று கெசட்டிலும் அய்யப்பனின் முதல் கோயில் இதுவே என்று கூறுகிறது.

முக்கிய திருவிழாக்கள்

ஆடி அம்மாவாசை,தை அம்மாவாசை தினங்களில் 2லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர்.

தவிர ஒவ்வொரு அம்மாவாசைக்கும் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

ஆடி அம்மாவாசை தினங்களில் வெட்ட வெளியில் கூடாரங்கள் அமைத்து மக்கள் தங்கி வழிபடுவார்கள். ஒருமாதத்திற்கு முன்பே அரிசி, பருப்பு சாமான்களோடு மக்கள் வெள்ளமாக திரண்டு வந்து தங்கி சொரி முத்தய்யனாரை வழிபடுவது மிகவும் சிறப்பு.

மூலவர் : சொரிமுத்து அய்யனார்
மூலாதாரம் : ஸ்ரீஅய்யப்பன்
தேவியர் : பொம்மக்கா திம்மக்கா
அம்மன் : பேச்சியம்மன்
காவல்தெய்வம்: பூதத்தார்
முக்கியத்துவம் : வாலைபகடை
தீர்த்தம் : தாமிரபரணி
ஊர் : பாபநாசம்.
புராணபெயர் : காரையார்
மாவட்டம் : நெல்லை.       

பொது தகவல்கள்

முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : திருநெல்வேலி யிலிருந்து 60 கி.மீ.

தூத்துக்குடி யிலிருந்து 215 கி.மீ.

தங்கும் வசதி : அடிவாரத்தில்உள்ள விக்கிரம சிங்க புரத்தில் தனியார் விடுதிகள் உள்ளன.இருந்தாலும் குடும்பத்தோடு வரும் பக்தர்கள் அம்பையிலோ நெல்லையிலோ தங்கி கோயிலுக்கு சென்றுவரலாம்.

கட்டணம் ரூ.100 முதல் ரூ.150 வரை.

போக்குவரத்து வசதி : *நெல்லையிலிருந்து அடிக்கடி பாபநாசத்திற்கு நிறைய பஸ் வசதி உள்ளது.அங்கிருந்து காரையார் அணை செல்லும் பஸ்ஸில் செல்ல வேண்டும்.எனினும் வாடகை கார், வேன் மூலம் செல்லுதல் நலம்.

*அருகிலுள்ள ரயில் நிலையம் அம்பாசமுத்திரம்.


*அருகிலுள்ள விமான நிலையம் மதுரை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.