Type Here to Get Search Results !

எட்டு அம்ச லட்சுமி

             


    லட்சுமிக்கு எட்டு விதமான விக்கிரகங்கள் உண்டு. எட்டும் சேர்ந்தது அஷ்ட லட்சுமி. அதில் அதிகமாக ஆராதிக்கப்படுவது கஜலட்சுமி. வாயில்களின் மேல் உத்திரத்தில் அந்த உருவம் பொறிக்கப்படுவது வழக்கம். எட்டு இதழ் தாமரைமேல் அமர்ந்திருந்தால் அவளுக்குத் தாமரை மலர், அமுத கலசம், வில்வகனி, சங்கு ஆகியன தாங்கிய நான்கு கரங்கள். அவள்பின்னால் இரண்டு யானைகள். அவற்றின் துதிக்கையில் நீர்க்குடங்கள். அவை அவளுக்கு அபிஷேகம் செய்கின்றன.
இரண்டு காங்களோடு மட்டும் இருக்கும் போது சாமானிய லட்சுமி, இந்திர லட்சுமி என்றும் சொல்வார்கள். இரண்டு கரங்களின் தாமரை மலர்களையும் மற்ற இரு கரங்களில் அபய முத்திரையையும், வரத முத்திரையையும் காட்டினால் வர லட்சுமி என்போம். மற்ற வடிவங்கள், தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, சந்தான லட்சுமி, மகா லட்சுமி, ஆதி லட்சுமி, தன லட்சுமி.

            விஷ்ணுவின் காக்கும் சக்திக்கு எட்டு அம்சங்கள், அவை வருமாறு, செல்வத்திற்கு ஸ்ரீதேவி,  பூமிக்கு பூதேவி, கல்விக்கு சரஸ்வதி, ப்ரீதி அன்பின் வடிவம், கீர்த்தி, புகழுக்கு, சாந்தி, அமைதிக்கு, துஷ்டியும், புஷ்டியும் ஆனந்தத்திற்க்கும், ஆற்றலும் உரியது.





    லட்சுமிக்கு எதிரிடையானவள். துரதிஷ்டத்தின் வடிவம், பாற்கடல் கடையும் போது இவளும் பிறந்தாள். லட்சுமிக்கு முன் தோன்றியதால் மூத்தவள், துச்சஹா என்ற ஒரு முனி அவளை மணந்து கொண்டார், அவன் பெயருக்கே, யாரானாலும் சகித்துக் கொள்ள முடியாதவன் என்று பொருள். அவளுடைய கணவன் கபிலன் என்றும் சொல்வர். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் பெயர் அதர்மன். கழுதை மேல் சவாரி செய்யும் விகாரமான கிழவியாக அலட்சுமியை சித்தரிக்கிறார்கள். கையில் துடைப்பம், அவள் கொடியில் காகம். சில கோயில்களில் இந்த வடிவத்தைக் காணலாம்.

   வணங்க திருப்திபடுத்தினால் தீமைகள் வராது பார்த்துக் கொள்வாள், அப்போது நலன்கள் பெருகும். அலட்சுமியை ஜேஷ்டதேவி என்றும், இவளும் லட்சுமியேதான் என்றும் சொல்வது உண்டு. இந்த உலகம் எதிரும் புதிருமானவற்றை தன்னுள் கொண்ட ஒரு சமநிலையில் இருக்கிறது. வளர்வதும், தேய்வதும், வருவதும் போவதும், காலத்தின் சுற்றாக இருக்கிறது என்பர். இன்னல் தருவதும் அவள் இன்னருளே என்று ஞானியர் சொல்வர், அதிர்ஷ்டமும், துரதர்ஷ்டமும் அவள் செயலே. வாழ்க்கையின் இந்தப் பெரும் உண்மையை நமக்குக் கற்று தருவதற்காகவே துரதிர்ஷ்டத்தையும் தெய்வீகமாக கருதினார்கள் போலும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.