Type Here to Get Search Results !

பிரமிடு வடிவம்

பிரமிடு வடிவம் நான்கு முக்கோணப் பங்கங்களைக் கொண்டது அல்லது கூம்பு வடிவமாக இருந்தாலும். தனக்குள்ளே பிராண சக்தியையும், மின்காந்த அலைகளையும், உற்பத்தி செய்து கொண்டேயிருக்கின்றன. இதனால் பிரமிடு வெளிப்புறத்தில் ஒரு மின்னாற்றல் தளத்தை உருவாக்குகிறது. இந்த ஆற்றல்தளம் பிரமிடின் அளவுக்கேற்ப நேர்விகிதத்தில் மாறுபடும், இந்த மின்காந்த சக்தி பிரமிடின் கூம்பு பாதத்தின் வழியாக உள்ளே பரவுகிறது என்று நம் சித்தர்கள் மற்றும் ரிஷிகள் உணர்ந்துள்ளனர், பிரமிடின் வெளிப்புறத்தில் உருவாகும் இந்த ஆற்றல் தளத்தை கிர்லியன் போட்டோகிராபி கருவி மூலம் நாம் கண்ணால் பார்க்க முடியும். எனவே பயன்படுத்தும்போது சில விதிகளைப் பயன்படுத்துவது கட்டாயமாகிறது,

       பொதுவாக பிரமிடுகளை மின்சாதனங்கள் அருகில் வைக்கக் கூடாது. மின்சார வயர்கள், அதிக ஒலி அதிர்வுகள் உண்டாகும் இடத்திற்கருகில் வைக்கக் கூடாது.
       பிரமிடுகளை இரும்பு, மற்ற உலோகம் சம்மந்தப்பட்ட பொருட்களின் மேல் வைக்கக் கூடாது. மரப்பலகை. பிளைவுட், கண்ணாடி, துணி அல்லது வெறும் தரையிலும் கூட வைக்கலாம்.
       காந்த திசைக்காட்டி கருவி கொண்டு வடக்கு தெற்கு அச்சை சரியாகக் கண்டுபிடித்து அதற்கு இணையாகத்தான் பிரமிடை வைக்க வேண்டும். பிரமிடை தேவையான போது எடுத்துவிட்டு வைக்கும் போது ஒவ்வொரு முறையும் வடக்கு  - தெற்கு அச்சில் வைக்க வேண்டும்.
       பிரமிடு உள்ளே வைக்கும் பொருட்கள் நீளமாக இருந்தால் அவற்றையும் வடக்கு – தெற்கு அச்சில் தான் வைக்க வேண்டும்,
       பிரமிடு உள்ளே  சரியாக மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தான் சக்தி அதிகமாக உருவாகிறது, எனவே மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் மேடை அமைத்து அதில் பொருட்களை வைக்க வேண்டும். உள்ளே தியானம் செய்யும் போது அந்த மேடையில் வடக்கு பார்த்து உட்கார்ந்து கொள்ள வேண்டும்.
       படுக்கும் போது தலையை வடக்கு திசை பக்கம் வைக்க வேண்டும்.
       நீண்ட நாட்களுக்கு பொருட்களைக் கெட்டு போகாமல் பாதுகாக்க வேண்டும் எனில் நாம் பயன்படுத்தும் பிரமிடில் காற்று சென்று வர குறிப்பிட்ட உயரத்தில் துளை போட வேண்டும்.

       பிரமிடின் அளவைப் பொறுத்து மூன்றில் ஒரு பங்கு அளவே பொருட்களை வைக்க வேண்டும், உள்ளே பாதியளவு இடம் காலியாக இருப்பது நல்லது.
       பால், தண்ணீர், தேன் போன்ற திரவங்களை நீண்ட காலம் பாதுகாக்க வேண்டுமெனில் செவ்வக வடிவிலான பிளாஸ்டிக் கண்ணாடி பாத்திரங்களை பயன்படுத்தலாம்,
       பிரமிடின் மேல் பாகம் நல்ல கூராக இருக்க வேண்டும், அந்த பாகம் சேதமடைந்தால் சக்தி கிடைக்காது.
       பிரமிடை வாஸ்து குறை என்று கூறி தலைகீழாக அமைப்பது கூம்பு பாகம் எதிர்மறைத் திசையில் வருவது கூடாது. ஆகாயத்தை நோக்கியே இருக்க வேண்டும்.

       பிரமிடின் அளவுகள் கிரேட் பிரமிடின் அடிப்பாகம் மற்றும் சாய்வு அளவுகளின் விகிதாச்சாரத்திலேயே இருக்க வேண்டும், அளவுகள் மாறினால் ஆற்றல் கிடையாது. எதிர்மறை விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பிரமிடுகளை முறையான அளவுகள், சரியான தொழில் நுட்பம், சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்க வேண்டும்.
       பிரமிடில் கிடைக்கும் சக்திகள், அதிர்வுளை அளக்க கிர்லியன் போட்டோ கிராபி, டௌசிங்ராடு. பெண்டுலம் போன்ற கருவிகள் மூலம் பிரமிடின் துல்லியமான ஈர்ப்புச்சக்தியை அளந்து கண்டுபிடிக்கலாம்,இக்காரணஙக்ளால் கடைகளில் கிடைக்கும் பிரமிடுகளை வியாபாரப் பொருளாக வாங்க வேண்டாம். உங்கள் தேவைக்கேற்ய சரியான பிரமிடுகளை கருவிகள் மூலம் சோதித்து ஈர்ப்புச் சக்தி நன்றாகக் கிடைக்கும் பிரமிடை ஆய்வாளர்களிடம் ஆலோசனைப் பெற்று வாங்கவும். தாமிரத்தகடுகளில் செய்யப்பட்ட பிரமிடுகளே நூறு சதவிகிதம் ஆற்றலைக் கொடுக்கும். மற்ற பிரமிடுகள் குறைந்த அளவே சக்தியை உருவாக்குகின்றன. ஆகவே தாமிரத்தால் செய்யப்பட்ட பிரமிடுகளையே எல்லாவற்றுக்கும் பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்.   

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.