Type Here to Get Search Results !

நவகிரஹங்களின் சிறப்பு..... மகத்துவம் குணம் என்ன....?

 


1. *சூரியன்*
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்.
சிம்மராசிக்கு அதிபதி. நவகிரஹங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு ~ கிழக்கு.
அதிதேவதை ~ அக்னி.
ப்ரத்யதி தேவதை ~ ருத்திரன்.
ஸ்தலம் ~ சூரியனார் கோவில்.
நிறம் ~ சிவப்பு.
வாகனம் ~ ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்.
தானியம் ~ கோதுமை.
மலர் ~ செந்தாமரை., எருக்கு.
வஸ்திரம் ~ சிவப்பு.
ரத்தினம் ~ மாணிக்கம்.
அன்னம் ~ ரவா., கோதுமை., சர்க்கரைப் பொங்கல்.
    

2. *சந்திரன்*
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர். வளர்பிறையில் சுபராகவும்., தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு ~ தென்கிழக்கு.
அதிதேவதை ~ ஜலம்.
ப்ரத்யதி தேவதை ~ கௌரி.
ஸ்தலம் ~ திருப்பதி.
நிறம் ~ வெள்ளை.
வாகனம் ~ வெள்ளைக் குதிரை.
தானியம் ~ நெல்.
மலர் ~ வெள்ளை அரளி.
வஸ்திரம் ~ வெள்ளாடை.
ரத்தினம் ~ முத்து.
அன்னம் ~ தயிர் சாதம்.

3 . *அங்காரகன் (செவ்வாய்)*
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர்., பாவ/புண்ணிய பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம்., விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு ~ தெற்கு.
அதிதேவதை ~ நிலமகள்.
ப்ரத்யதி தேவதை ~ க்ஷேத்திரபாலகர்.
ஸ்தலம் ~ வைத்தீஸ்வரன் கோவில்.
நிறம் ~ சிவப்பு.
வாகனம் ~ ஆட்டுக்கிடா.
தானியம் ~ துவரை.
மலர் ~ செண்பகப்பூ., சிவப்பு அரளி
வஸ்திரம் ~ சிவப்பு ஆடை.
ரத்தினம் ~ பவளம்.
அன்னம் ~ துவரம் பருப்பு பொடி சாதம்.
  

4. *புதன்*
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம்., கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு ~ வட கிழக்கு.
அதிதேவதை ~ விஷ்ணு.
ப்ரத்யதி தேவதை ~ நாராயணன்.
ஸ்தலம் ~ மதுரை.
நிறம் ~ வெளிர் பச்சை.
வாகனம் ~ குதிரை.
தானியம் ~ பச்சைப் பயறு.
மலர் ~ வெண்காந்தள்.
வஸ்திரம் ~ வெண்ணிற ஆடை.
ரத்தினம் ~ மரகதம்.
அன்னம் ~ பாசிப்பருப்பு பொடி சாதம்.
   

5. *குரு*
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால்., தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுா்., மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு ~ வடக்கு.
அதிதேவதை ~ பிரம்மா.
ப்ரத்யதி தேவதை ~ இந்திரன்.
ஸ்தலம் ~ திருச்செந்தூர்.
நிறம் ~ மஞ்சள்.
வாகனம் ~ மீனம்.
தானியம் ~ கொத்துக்கடலை.
வஸ்திரம் ~ மஞ்சள் நிற ஆடை.
ரத்தினம் ~ புஷ்பராகம்.
அன்னம் ~ கடலைப் பொடி சாதம்., சுண்டல்.
   

6. *சுக்கிரன்*
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்.,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு ~ கிழக்கு.
அதிதேவதை ~ இந்திராணி.
ப்ரத்யதி தேவதை ~ இந்திர மருத்துவன்.
ஸ்தலம் ~ ஸ்ரீரங்கம்.
வாகனம் ~ முதலை.
தானியம் ~ மொச்சை.
மலர் ~ வெண் தாமரை.
வஸ்திரம் ~ வெள்ளாடை.
ரத்தினம் ~ வைரம்.
அன்னம் ~ மொச்சைப் பொடி சாதம்.


7. *சனி*
இவர் சூரியனுடைய குமாரர். புண்ணிய/பாவ பலன்களை தருவதில் ஈஸ்வர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை., கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம்., கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு ~ மேற்கு.
அதிதேவதை ~ யமன்.
ப்ரத்யதி தேவதை ~ பிரஜாபதி.
ஸ்தலம் ~ திருநள்ளாறு
நிறம் ~ நீலம்.
வாகனம் ~ காகம்.
தானியம் ~ எள்.
மலர் ~ கருங்குவளை., வன்னி.
வஸ்திரம் ~ நீல நிற ஆடை.
ரத்தினம் - நீலம்
அன்னம் ~ எள்ளுப்பொடி சாதம்.


8. *ராகு*
இவர் அசுரத்தலையும்., நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு ~ தென் மேற்கு.
அதிதேவதை - பசு.
ப்ரத்யதி தேவதை ~ பாம்பு.
ஸ்தலம் ~ காளஹஸ்த்தி.
நிறம் ~ கருமை.
வாகனம் ~ நீல சிம்மம்.
தானியம் ~ உளுந்து.
மலர் ~ மந்தாரை.
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை.
ரத்தினம் ~ கோமேதகம்.
அன்னம் ~ உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.


9. *கேது*
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும்., செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு ~ வட மேற்கு.
அதிதேவதை ~ சித்திரகுப்தன்.
ப்ரத்யதி தேவதை ~ பிரம்மன்.
ஸ்தலம் ~ காளஹஸ்த்தி.
நிறம் ~ செம்மை.
வாகனம் ~ கழுகு.
தானியம் ~ கொள்ளு.
மலர் ~ செவ்வல்லி.
வஸ்திரம் ~ பல நிற ஆடை.
ரத்தினம் ~ வைடூரியம்.
அன்னம் ~ கொள்ளுப்பொடி சாதம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.