Type Here to Get Search Results !

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை: நேரடி ஒளிபரப்பு



முருகன் கோவிலில் இன்று முதல் மூன்று நாட்கள் நடக்கும் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா கோவில் இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிப்பரப்பாகிறது.

கொரோனா தொற்று காரணமாக திருத்தணி முருகன் கோவிலுக்கு பக்தர்கள்  வருவதற்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா இன்று முதல் துவங்கி, வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இது குறித்து கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதாவது: முருகன் கோவிலில் இன்று(12ம் தேதி) முதல் வரும், 14ம் தேதி வரை, மாலை, 5:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை கோவில் உட்பிரகாரத்தில் யாகசாலை அருகே தற்காலிக அமைக்கப்பட்டு உள்ள குளம் மற்றும் நீராழி மண்டபத்தில் தெப்பல் உற்சவம் நடக்கிறது. இந்நிகழ்ச்சியை தினமும் மாலை, 5:00 மணி முதல் இரவு நிகழ்ச்சி முடியும் வரை கோவில் நிர்வாகம் மூலம், ஹிந்து அறநிலையத்துறை இணையதளம் www.tnhrce.gov.in, திருக்கோவில் இணையதளம் https://tiruttanigaimurugan.org  யூடியூப் சேனல் https://youtu.be/Ac3ubiTU8k மற்றும் பேஷ்புக் அலைவரிசை   https://www.facebook.com/arulmigusubramaniyaswamytemple.tiruttanigai.1  ஆகியவற்றின் மூலம் நேரடி ஒளிப்பரப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.