Type Here to Get Search Results !

எந்த இடத்தில் குரு பகவான் இருந்தால் என்ன பலன்?

2019-20ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12-ம் நாள், விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு சித்த யோகம், கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார்.
கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குருபலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.
ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.
* குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் - நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.
* குரு பகவான் 2-ல் இருந்தால் - பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.
* குரு பகவான் 3-ல் இருந்தால் - சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.
* குரு பகவான் 4-ல் இருந்தால் - தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.
* குரு பகவான் 5-ல் இருந்தால் - புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.
* குரு பகவான் 6-ல் இருந்தால் - போராட்டமில்லாத வாழ்வு மலரும்.
* குரு பகவான் 7-ல் இருந்தால் - நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
* குரு பகவான் 8-ல் இருந்தால் - நீண்ட ஆயுள் உண்டு.
* குரு பகவான் 9-ல் இருந்தால் - அனைத்தையும் அள்ளிக் கொடுப்பார்.
* குரு பகவான் 10-ல் வந்தால் - பதவி மாற்றம் உறுதியாகும்.
* குரு பகவான் 11-ல் இருந்தால் - செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.
* குரு பகவான் 12-ல் இருந்தால் - சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.