Type Here to Get Search Results !

எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது

எந்தவொரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது .அப்படி தீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவாக இருக்க முடியாது .. கார்மேக புகழ் மோடி சொல்கிறார்.

காந்தியை கொன்றவரை கொலையாளி என்று அழைக்க வேண்டும் .தீவிரவாதி என்றல்ல .. நிர்மலா சீதாராமன் ..
..
மோடி அவர்களே எந்தவொரு மதமும் தீவிரவாதத்தை போதிக்க வில்லை அன்பையே போதிக்கிறதென்கிற போது எங்கிருந்து பிற மதத்தின் மீது வன்மம் குரோதம் எழுகிறது .. ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பென்ற பெயரில் ஐந்து ஆறு வயது சிறுவர்களிடத்தில் முஸ்லிம்களை பற்றி கொடூரமாக சித்தரித்து அவர்கள் வளரும் போதே முஸ்லிம்கள் மீதான தவறான கண்ணோட்டத்தோடு கொலை வெறியாகவே வார்த்தெடுப்பதற்கு பெயர் என்ன .. இதை செய்கிற ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்துக்களின் பெயரில் தான் செய்கிறதே தவிர வேறெந்த நோக்கமும் இல்லையே .. இதை எப்படி அழைப்பது ..

கோட்சே தன் கையில் இஸ்மாயிலென பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றது தனிப்பட்ட பகைக்காகவா .. இந்து ராஷ்ட்ரீயம் அமைய காந்தி தடையாக இருக்கிறார்/இருந்தார் என்பதற்காக தானே தவிர வேறெதும் இல்லை .. இந்து என்ற பெயரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்தே கொல்லபட்டவர்கள் தனிப்பட்ட பகைக்காகவோ வெறுப்பினாலோ கொல்லப் பட வில்லை.  ஆர்எஸ்எஸ் அவர்களுக்கு பயிற்சி வகுப்பென்ற பெயரில் மாட்டை புனிதமென மூளைச் சலவை செய்து மனிதனை அடித்தே கொல்ல அவர்கள் மனதில் விஷத்தை ஏற்றியதை எப்படி கொள்வது..

தலித்கள் மீதான கொலவெறி தாக்குதலை இடைச் சாதிக்காரனை கொண்டு நடத்தப் படுகிறதே இதெல்லாம் இந்து மதத்தின் பெயரால் தானே . இதையெல்லாம் தனிப்பட்ட பகை என்று கொள்ள வேண்டுமோ.. மதம் யானைக்கும் வெறி நாய்க்கும் தானே வர வேண்டும் .. மதவெறியோடு அலைகிற செயலை எதைக் கொண்டு அழைப்பது .. ஏதாவது புதியதொரு "நாமகரணம்" சூட்டுங்கள் .அதைச்சொல்லி அழைப்போம் .

மேகத்தில் மறைந்தால் ரேடாரில் தெரியாதென்ற புதிய தொழில் நுட்பத்தை நாட்டிற்கு தந்தவராயிற்றே. எப்படி அழைப்பதென சொல்லுங்கள் .. ஏதேனும் புதிய இந்தியா பிறக்கும் போது "நாமகரணம்" சூட்டலாம் ..
..
கொலையாளி என்றழைக்க வேண்டுமே தவிர தீவிரவாதி என்றழைக்க கூடாதென நிர்மலா சொல்கிறார் .. காந்தியோடு கொடுக்கல் வாங்கல் பகையா பங்காளி தகராறா .. கோட்சே மிக தெளிவான வாக்குமூலத்தில் இந்துவிற்கு விரோதியாக காந்தி செயல்பட்டார் அதனாலேயே கொன்றேன் என்கிறான் ..

மதத்தின் பெயராலேயே கொன்றதை அவரும் அவரது சகோதரரும், வாக்குமூலம் தருகிறார்கள். பின் அவரை தீவிரவாதியென அழைக்காமல் கொலைகாரனென சுருக்க வேண்டும் .. ஆனால் பிரதமரே தேசத் தந்தையை கொன்ற கோட்சே சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செய்வார் .. தேச தியாகியைப் போல சித்தரிக்கப் படுகிறார் .. சில சங்பரிவார் அமைப்புகள் காந்தி அல்ல தேசபிதா, கோட்சே தான் தேசபிதா என்கிறது

பாதுகாப்பு அமைச்சர் சொல்படி கொலைக்காரனை தேச தியாகியைப் போல அதுவும் தேசத்தின் தந்தையை கொன்றவனை தேசப் பிதாவாக கொண்டாடுவதற்கு பெயர் என்ன சொல்லுங்கள்..
.

கோட்சே தீவிரவாதி இல்லையென உச்சநீதிமன்றம் சொன்னதாக மன்னார்குடி ஜீயர் சொல்கிறார் .. உச்சநீதிமன்றம் துவக்கபட்டதே 1950 ல் .. கோட்சே தூக்கிலிடப்பட்டதோ 1949 ல் ..  மதம் தலைக்கேறினால் புத்தி போகும் ..
காந்தியை கொன்ற போது இந்திய வானொலி காந்தியை ஒரு இந்து தான் கொன்றான் என செய்தி சொல்லியது .. காரணம் இஸ்மாயில் என பச்சை குத்திக் கொண்டு காந்தியை சுட்டுக் கொன்றதால் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை மிகப் பெரியளவில் திட்டமிட்டு செய்தது ஆர்எஸ்எஸ்... அதை தடுக்க வேண்டி .. தந்தை பெரியார் வானொலியில் காந்தியை கொன்றது பார்பனன் என்ற இந்து என பேசினார் .. முத்துராமலிங்க தேவர் .. வண்டியில் மைக்செட்டை கட்டிக்கொண்டு கிராமம் கிராமாக சென்று இந்து தான் கொன்றான் என பிரச்சாரம் செய்தார் .. இதையெல்லாம் மறந்து விட்டு /மறைத்து விட்டு இன்று இந்து என சொல்லலாமா என பேசுகிறார்கள் ..
..
இந்தியாவில் தடைசெய்யபட்ட ஒரு பாசிச பயங்கரவாத இயக்கம் ஆர்எஸ்எஸ் தான்  அவர்கள் இன்று தேசத்தின் புனிதர்களாக மாறியதுதான் காலக் கொடுமை .. விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயரிடம்  மன்னிப்பு கடிதம் கொடுத்தவரெல்லாம் பாரத ரத்னாவாக வர முடிந்த தேசத்தில் காந்தியை கொன்றவன் தேசபக்தனாக தான் தெரிவான்..
..
மதவெறி தேசபக்தியாகாது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.