Type Here to Get Search Results !

மீனம் ராசி பலன் 2017

மீனம் 
சமாதானத்தால் சாதிப்பவர்களே! சூரியன் சாதகமாக இல்லாததால் சோர்வு, களைப்பு, முதுகு வலி, மூட்டு வலி வந்துப் போகும். உங்களை யாரும் புரிந்துக் கொள்ளவில்லையென்று அலுத்துக் கொள்வீர்கள். பல் வலி, காது வலி வந்துப் போகும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் மனஇறுக்கம் குறையும். நல்லவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகையும் கைக்கு வரும். சகோதர வகையில் இருந்து வந்த மனத்தாங்கல் விலகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக வீடு, மனை வாங்குவதற்கு முயற்சி செய்தீர்களே! ஆனால் உங்கள் ரசனைக் கேற்ப அமையாமல் போனதே! இந்த மாதத்தில் நீங்கள் விரும்பிய படி வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பத்திரப் பதிவும் செய்வீர்கள். தந்தையார் அவ்வப்போது கோபப்பட்டாலும் உங்களுக்கு உதவிகளையும் செய்வார். தந்தையாருக்கு லேசாக நெஞ்சு வலி வந்துப் போகும். உங்களுடைய ராசிக்கு சாதகமாக சுக்ரன் இருப்பதால் மனப்பக்குவம் அதிகரிக்கும். அனுபவப் பூர்வமாக பேசுவீர்கள். அறிவுப் பூர்வமான முடிவுகள் எடுப்பீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அயல்நாட்டில், வெளிமாநிலத்தில் இருப்பவர்களாலும் ஆதாயமடைவீர்கள். வாகனப் பழுதை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். உங்களுடைய ராசிநாதன் குருபகவான் வலுவாக இருப்பதால் மனைவிவழியில் அந்தஸ்து ஒருபடி உயரும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பூர்வீக சொத்தை சீர்த்திருத்தம் செய்து அதில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்துவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். கன்னிப் பெண்களே! காதல் விவகாரத்தில் தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிடைக்கும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரனும் அமையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் எதற்கெடுத்தாலும் குறைக் கூறிய அதிகாரியின் மனசு மாறும். உங்களை அதிகாரி புரிந்துக் கொள்வார். உங்களிடம் சில பொறுப்புகளையும் ஒப்படைப்பார். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். கலைத்துறையினரே! தள்ளிப் போன வாய்ப்புகள் கூடி வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். உங்களின் ஆளுமைத் திற

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.