Type Here to Get Search Results !

கும்பம் ராசி பலன் 2017

கும்பம் 
யதார்த்தத்தை விரும்புபவர்களே! செவ்வாய் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். குடும்ப வருமானம் உயரும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீரியத்தை விட்டு விட்டு காரியத்தை முடிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். இளைய சகோதர வகையில் அலைச்சல், செலவுகள் இருந்தாலும் முன்பிருந்த மனக்கசப்புகள் நீங்கும். சொத்துப் பிரச்னை சுமூகமாகும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்து வந்த சிவில் வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு ஷேர் மூலமாகவும் பணம் வரும். கெமிக்கல், எலக்ட்ரிக்கல், உணவு தொடர்புள்ள கம்பெனி ஷேர்களால் பணம் வரும். உங்களின் பிரபல யோகாதிபதியான வெள்ளி பகவான் சாதகமாக இருப்பதால் வீடு மாறுவதற்கு திட்டமிடுவீர்கள். வாகனத்தையும் மாற்றுவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர்களின் உடல் நிலையும் சீராகும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதி புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு தளரும். உங்களின் கஷ்ட, நஷ்டங்களை கொஞ்சம் புரிந்து நடந்துக் கொள்வார்கள். உங்கள் மகனுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மகளுக்கு இருந்து வந்த ஆரோக்ய குறைவு நீங்கும். உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் 10-ல் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் சவாலான கடினமான காரியங்களை எடுத்து செய்யக் கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். அதற்கு பிரபலங்களும் பக்கபலமாக இருப்பார்கள். தைரியம் கிடைக்கும். ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வெளி மாநில தொடர்புள்ள நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். ராகுவும், கேதுவும் சாதகமாக இல்லாததால் பணப்பற்றாக்குறை இருக்கும். கன்னிப் பெண்களே! உங்களின் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படப்பாருங்கள். சிலர் தடைப்பட்ட உயர்கல்வியை தொடருவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களையும் கற்றுக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களும் வருவார்கள். வேலையாட்களிடம் அதிக கண்டிப்புக் காட்ட வேண்டாம். உத்யோகத்தில் கொஞ்சம் நிம்மதி உண்டாகும். உங்களுடைய உழைப்பையும், நல்ல மனதையும், உடன்பணியாற்றுபவர்களும், சக ஊழியர்களும் புரிந்துக் கொள்ளத் தொடங்குவார்கள். கலைத்துறையினரே! உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கொஞ்சம் கரடுமுரடான பாதையில் பயணிக்க வைத்தாலும் இனிக்கும் மாதமிது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.