Type Here to Get Search Results !

கன்னி ராசி பலன் 2017

கன்னி 
விடாமுயற்சியால் முதலிடத்தைப் பிடிப்பவர்களே! சனிபகவான் வலுவாக 3-ம் வீட்டிலேயே தொடர்ந்துக் கொண்டிருப்பதால் மனோபலம் கூடும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். ஹிந்தி, தெலுங்குப் பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகமாகும். அடிக்கடி தொல்லை தந்த வாகனம் சரியாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். வீடு கட்டுவதற்கு சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிட்டும். 6-ம் தேதி வரை ராசிநாதன் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். ஆனால் 7-ம் தேதி முதல் புதன் வக்ரமாவதால் தொண்டை வலி, சளித்தொந்தரவு, வீண் டென்ஷன், நரம்பு சுளுக்கு வரக்கூடும். சூரியன் சாதகமாக இல்லாததால் தூக்கம் குறையும். முடிந்தால் யோகா, தியானம் செய்யப்பாருங்கள். கணவன்-மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. மனைவிக்கு சிறுசிறு நெருப்புக் காயங்கள், மாதவிடாய் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்துச் செல்லும். குரு ராசிக்குள் அமர்ந்திருப்பதால் பெரிய நோய் இருப்பதைப் போன்ற பயம் வந்துப் போகும். தலைச்சுற்றல், செரிமானக் கோளாறு, தோலில் நமைச்சல் வந்துப் போகும். கன்னிப் பெண்களே! காதல் இனிக்கும். பெற்றோருடன் இருந்த மோதல் நீங்கும். உடல் உஷ்ணத்தால் தலை முடி உதிரும். உணவில் காய், கனிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரம் செழிக்கும். பணியாளர்களிடம் கண்டிப்பாக இருங்கள். செங்கல் சூளை, கமிஷன், உணவு, கட்டிட வகைகளால் லாபம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகளால் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும். கலைத்துறையினரே! வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். தடைகளையும் தாண்டி முன்னேறும் மாதமி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.