Type Here to Get Search Results !

கோயில்களில் பிரஷனம் பார்ப்பது சரியா ? தவறா ?

        

         என்னுடைய நண்பர் ஒருவர் அவரது கோயிலில் பிரஷனம் பார்ப்பதற்காக என்னுடன் ஆலோசனைக் கேட்டார். அவருக்கு பத்து நபருடைய முகவரியை கொடுத்து இவற்றில் ஒருவரை தொடர்பு கொள்ளுங்கள் என நான் கூறினேன். அவரும் சந்தோஷமாக முகவரியை வாங்கிவிட்டு என்னிடமிருந்து விடைபெற்றார், சில நாட்களுக்குப் பின் மறுபடியும் என்னை சந்தித்தார். 

          நண்பா, என்னுடைய கோயில் உனக்கே தெரியுமல்லவா ? 300 வருடங்களுக்கு முன்புள்ள மிகவும் பழமையான கோயில் என்று..... ஆமா, ஏன் ? என்று நான் கேட்க அவர் கூறத் தொடங்கினார். 300 வருடங்களாக சிவன், சாஸ்தா, நாகர் மட்டுமே வைத்து வழிபட்டு வந்தோம். ஆனால் இப்போது பிரஷனம் பார்த்ததில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறுகிறார்கள். இதுவரை  4 மற்றும் 5 பேரை வைத்து பிரஷனம் பார்த்துவிட்டோம். 
           
           ஒருவர் கூறினார், பத்ரகாளி மற்றும் இசக்கிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று..... மற்றொருவர் கூறுகிறார், சாமுண்டியை வைத்து வழிபட வேண்டும் என்று....... இன்னும் ஒருவர் கூறுகிறார், இராஜராஜேஸ்வரிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று....... இப்படி பலரும் பலவிதமாக கூறுகிறார்கள். என்ன செய்வது என்றே எனக்கு தெரியவில்லை என வருந்தினார்.
                 
                 யாரை நம்புவது ? யார் சொல்வதை கேட்பது என்று தெரியவில்லை. நான் விசாரித்ததில் அவர்களுடைய இஷ்ட தேவதைகளின் பெயர்களைக் கூறி, அந்த சாமிக்கு கோயில் கட்டு, இந்த சாமிக்கு கோயில் கட்டு என்று கூறுவதாக அறிந்தேன்,

             நண்பா நீ அன்று கூறியது மிகவும் சரியானதுதான். சரியான இடத்தில் கோயில் அமைத்து, அதற்கு தகுந்த அளவுகள் மூலம் ஒழுங்குபடுத்தினாலே போதும், சாமிக்கு தேவையான சாஸ்திர ரீதியில் பூஜை கர்மங்கள் செய்தாலே எந்த கெட்ட காரியம் நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை.  தேவ பிரஷனம் தேவை தான். ஆனால் அதற்கு தகுந்த ஆட்களைக் கொண்டும், எல்லாம் தெரியும் என்று கூறுபவர்களை நன்கு ஆராய்ந்து பிரஷனம் செய்தால் நமக்கும் கஷ்டம் இல்லை.... நம் ஊருக்கும் கஷ்டம் இல்லை..... நம்ம தெய்வத்தை நம்பாமல், யாரை வைத்து, எதற்கு பிரஷனம் பார்ப்பது ? என்றற உண்மையை தெளிவாக புரிந்து கொண்டு என்னிடமிருந்து விடைபெற்றார் என்னுடைய நண்பர்.

            உண்மையாக நடந்த என்னுடைய நண்பனின் கஷ்டம் மட்டுமல்ல... உலகில் உள்ள எல்லா மக்களும் பிரஷனம் பார்ப்பதில் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்காக சித்தர்கள் கூறியதைப் போல் “செய்வதை திருந்த செய்ய வேண்டும்” என்ற நெறியை கடைபிடிக்க வேண்டும். வழியில் வந்தவர்களையும், போனவர்களையும், கோயில்களில் அனுமதிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. ஒரு நபருக்கு பிரஷனம் பார்ப்பதற்கு 5, 000 முதல் 15, 000 வரை செலவு செய்திருக்கிறார் என்னுடைய நண்பர்.. கோயிலுக்கு பிரஷனம் பார்க்க 1000 முதல் 3000 வரை போதுமான விஷயம். 

        நமது கோயிலில் அவர்களுடைய இஷ்ட தேவதையை உட்கார வைக்க நாம் 15, 000 - ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளது. யாரிடம் சொன்னால் புரியும் ? மக்கள் என்று மூட நம்பிக்கைவிட்டு வெளிவருவார்களோ அன்று தான் நமது கோயில்கள் பழைய நிலைமைக்கு மாறும். ஊரும் செழிப்பாக வளரும்....  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.