Type Here to Get Search Results !

உலக யோகா தினம் -கலி 5117 ஆனி - 5 (21 - 06 - 2015)

              இந்தியாவின் கலைக்கு புத்துணர்வு கொடுந்த நமது பாரத பிரதமர் ஸ்ரீமன் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை உரித்தாக்கிக் கொண்டு. இந்நாளை (கலி 5117 ஆனி 5 - ம் தேதி ) 21 - 06 - 2015) உலக யோகா தினம் என அறிமுகப் படுத்திய நமது பாரத பிரதமரை பல்லாண்டு காலம் வாழ வாழத்துகிறோன்.

                 பிரதமர் ஸ்ரீமன் நரேந்திர மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபை "உலக யோகா நாள்" அறிவிக்க வேண்டும் என்று அச்சபையில் உரையாற்றியதை ஏற்று ஜூன் 21 - ஆம் தேதியை "உலக யோகா தினம்" என்று ஐ.நா அறிவித்ததை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

                  யோகா என்பதை நாம் அறியா புதிர் போல ஆகிவிட்டது. ஆனால் நாம் செய்யும் வேலையில் யோகா உள்ளது என்பதை எத்தனை பேருக்கு தெரியும் (உ.ம்) வயதான மூதாட்டிக்கு உடம்பு வலி வருவது இயல்பு, ஆனால் அவர்கள் முடியவில்லை என்று இருந்தால் அவர்கள் படுக்கை ஆகிவிடுவார்கள், இன்னும் செல்ல போனால் நாம் எழுதும் போதும் யோகா உள்ளது. நம் விரல் மணிக்கட்டு, கைமுட்டு போன்ற இடங்களில் அசைவில் யோகா உணரமுடியும்.

            தலைநகர் டில்லியில் உள்ள ராஜ் பாத் பகுதியில் விழா நடைபெறும். ஸ்ரீமன் பிரதமர் மோடியுடன் மைதானத்தின் உட்புறம் மற்றும் வெளிப்பகுதிகளில் சுமார் 37 ஆயிரம் பேர் வரையில் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
            ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிவிப்புக்கு காரணமாக இருந்த ஸ்ரீமன் நரேந்திர மோடி அவர்களுக்கும்.ஐ.நா சபையில் இந்த தீர்மானத்தை அறிமுகப் படுத்திய திரு.அசோக் முகர்ஜி அவர்களுக்கும். ஐ.நா சபைக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

                 யோகா இல்லாமல் மனிதன் இல்லை, யோகா ஹிந்துக்களுக்கு மட்டும் உரியது யோகாவை ஹிந்துக்களை தவிர யாரும் உரிமை கொண்டாட முடியாது, பாரத இந்திய மக்களே நீங்கள் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் "இந்தியாவில் உள்ள அனைவரும் ஹிந்துக்களே" நான் ஹிந்து இல்லை என்று யாரும் கூற முடியாது.

            பாரத தாய் மீது உறுதியாய் கூறுகிறேன் என்றும் உங்களோடு,
ஆன்மீக ஞானி.....................

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.