Type Here to Get Search Results !

அரசியல் கட்சியினருக்கு இதை விட என்ன வேண்டும் பகவத் கீதை யை தேசிய நூலாக அறிவிக்க



"இஸ்கான்' எனப்படும் "ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' இயக்கம் நடத்திய பகவத் கீதைப் போட்டியில் 12 வயது முஸ்லிம் மாணவி முதலிடம் வென்றார்.


       இஸ்கான் அமைப்பு சார்பில் மும்பையில் பள்ளிக்கூட மாணவர்களுக்கான பகவத் கீதை எழுத்து போட்டி கடந்த ஜனவரி மாதம் நடந்தது. இதில், மராட்டியம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 195 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபெற்று தேர்வு எழுதினர். போட்டியில் பகவத் கீதையின் போதனைகளை உள்ளடக்கிய 100 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.தேர்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த தேர்வில் பங்கேற்ற மும்பை மிரா ரோடு பகுதியில் உள்ள காஸ்மோபாலிட்டன் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வரும், மரியம் சித்திக் என்ற 12 வயது முஸ்லிம் மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார்.

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதை போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மாணவி மரியம் சித்திக் தனது மகிழ்ச்சியை நிருபர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

அனைத்து மதங்களை பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு எப்போதும் உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்து சமய நூல்களையும் படிப்பேன். ஒருவர் எல்லா மதத்தையும் மதிப்பவராக இருக்க வேண்டும்.வாழ்க்கையை பற்றி பல்வேறு விஷயங்களை பகவத் கீதையில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்பதால், அந்த நூலை ஆர்வத்துடன் படித்தேன். வாழ்வின் பொன்னான விதிகளை இந்த புனித நூல் எனக்கு கற்று கொடுத்தது. உலகில் ஏராளமான மதங்கள் இருக்கலாம். ஆனால், அவை எல்லாவற்றையும் விட மனிதநேயம் தான் மிகப்பெரிய மதம். இதை பகவத் கீதையில் இருந்து நான் கற்றுக் கொண்டேன்.இவ்வாறு மாணவி மரியம் சித்திக் தெரிவித்தார்.

     ஒன்று மட்டும் கூறிக் கொள்கிறேன். இந்தியாவில் உள்ளவர்கள் அனைவரும் ஹிந்துக்களே. என்றுதான் பகவத்கீதை தேசிய நூலாக அறிவித்தால் தான் இந்தியாவில் உள்ள அனைவரும், மத்திய மாநில அரசும் தர்மத்தை கடைபிடிக்க முடியும்.


இல்லையென்றால் நமது இந்தியா அழிவை நோக்கிச் சென்றுவிடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.