Type Here to Get Search Results !

அதிசய பிரசாதம் வழங்கும் நரசிம்மர் கோவில்.....

  


நரசிம்மர் கோவிலில் வழங்கப்படும் வித்யாசமான பிரசாதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொதுவாக, கோவில் பிரசாதம் என்றால் உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு, புளியோதரை, பஞ்சாமிர்தம் தான். ஆனால், இங்கு ஒரு கோவிலில் சற்று வித்யாசமான பிரசாதம் கொடுக்கப்படுகிறது. அம், சிங்கப்பெருமாள் நரசிம்மர் கோவிலில், சுவையான மிளகு தோசையை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த சிங்கப்பெருமாள் நரசிம்மர் கோவில், சென்னை - திருச்சி சாலையில், செங்கல்பட்டிற்கு முன் அமைந்துள்ளது. மேலும், இந்த ஊர் நரசிம்மரின் முகமான சிங்கத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது.


மேலும், இந்த குடைவரைக் கோவில், 2000 ஆண்டுகள் பழமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்தது.

இந்த கோவிலில், ஒரு பாறையின் மீது, கிழக்குமுகமாக ஒரு தள கோபுரம் அமையபெற்றுள்ளது. மேலும் இங்கு, சுவாமி குகைக்குள் வீற்றிருப்பதால் கோவிலை வலம் வருபவர்கள் சுமார் நூறு படிக்கட்டுகள் கொண்ட சிறு குன்றினையும் சேர்த்து தான் வலம் வரவேண்டும். இதனால், தான் இக்கோவிலுக்கே உரித்தான த்ரிநேத்ர தரிசனம், கிரிவலம் இக்கோவிலின் சிறப்பாகும்.

இந்த கோவிலில், கடன் தொல்லை நீங்க, வழக்குகளில் வெற்றி கிடைக்க, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக சிறப்புபூஜை செய்யப்படுகிறது. இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தினருக்கும், இராகு திசை நடப்பவர்களுக்கும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. இந்த கோவிலில் உள்ள மற்றோரு சிறப்பம்சம், கோயிலின் பின்புறமுள்ள சக்தி வாய்ந்த அழிஞ்சல் மரம்.

குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள் இம்மரத்தில் சந்தனம், குங்குமம் பூசி நெய் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இங்கு ஒரு பக்கம் லட்டு, அதிரசம், முறுக்கு, சீடை, தட்டை போன்றவை இருந்தாலும் பித்தளைப் பானைகளில் வைக்கப்பட்டிருக்கும் மிளகு தோசைக்கே வரவேற்பு அதிகம். எண்ணெய் பொடி சேர்த்து கொடுக்கப்படும் இந்த தோசைகளை குழந்தைகள் விரும்பி உண்பதால்தோசைப் பெருமாள் கோவில் என்று செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.