Type Here to Get Search Results !

இன்றைய ராசிபலன் - Latest Astrology...! 14-02-2021

 



மேஷம்

மேஷம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் முக்கிய பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டைப் புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். புது பொருள் வந்து சேரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


மிதுனம்

மிதுனம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து பொறுப்பாக இருப்பார்கள். பிரியமானவர்க ளுக்காக சிலவற்றை விட்டு கொடுப்பீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்ஆவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


கடகம்

கடகம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதைதெரியும் நாள்.


சிம்மம்

சிம்மம்: சந்திராஷ்டமம் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர் நண்பர்களை பகைத்து கொள்ளாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.


கன்னி

கன்னி: தன்னம்பிக்கையுடன் பொதுகாரியங்களில் ஈடுபடுவீர்கள்.  சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தாயார் ஆதரித்து பேசுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் . நல்லன நடக்கும் நாள்.


துலாம்

துலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சிலமுக்கியமுடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தில் அடிப் படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம்  வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வழிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


தனுசு

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள் புது வேலை கிடைக்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினைகள் தீரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் கலந்தா லோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சியால் முன்னேறும் நாள்.


கும்பம்

கும்பம்: கணவன் மனைவிக்குள் அன்னியோன்னியம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவுகூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


மீனம்

மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். தெளிந்த சிந்தனையுடன் இருக்க வேண்டிய நாள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.