Type Here to Get Search Results !

Today Rasi Palan Tamil : இன்றைய ராசி பலன்கள் (15 ஜனவரி 2021)


மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மங்கல நிகழ்வுகள் இருக்கும்.எந்த வேலையிலும் புதுப்பொலிவுடன் தெம்புடன் இருப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணங்களில் அனுகூல பலன் இருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும்.

ரிஷபம்

உங்கள் ராசிக்கு அசையாச் சொத்து வகையில் செலவுகள் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் மனத்தாபம் இருக்கும். கடன் வாங்கும் சூழ்நிலை இருக்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். வீட்டில் அன்பும் ஆதரவும் இருக்கும்.

மிதுனம்

உங்கள் இராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். உடலில் சில உபாதைகள் இருக்கும்.உங்களின் ராசிக்கு மாலை 5.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் சிக்கனம் வேண்டும்.பொருளாதார ரீதியில் பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலையில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகம் சம்பந்தமாக புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும். வீட்டில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். எதிலும் நிதானம் வேண்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு இனிய செய்திகள் இல்லம் தேடி வரும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். குழந்தைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றம் இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சுபகாரியம் உண்டாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு எந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாகவே இருக்கும். திருமண பேச்சுவார்த்தை சுமுகமாக இருக்கும். வீட்டில் இதுவரை இருந்த பிரச்சனை தீரும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு எந்த செயலையும் தாமதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் மாற்று கருத்தால் மன சங்கடம் உண்டாகும். உத்தியோகத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. வழக்கு போன்ற விசயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு செய்யும் செயல் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த வங்கிக் கடன் அமையும். பணவரவு தாராளமாக இருக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். குழந்தைகளால் வீண் விரயங்கள் இருக்கும். உற்றார் உறவினர்களுடன் தேவையில்லாத வாக்குவாதங்கள் உண்டாகும்.விட்டுக் கொடுத்து சென்றால் பணம் பிரச்சனைகள் தீரும்.உத்தியோகத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் அனுகூலம் இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு சுபகாரியங்கள் அனுகூல பலன் கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும்.தடைபட்ட காரியம் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கும்.உத்தியோக ரீதியாக வெளிமாநில தொடர்பு இருக்கும். நினைத்தது நிறைவேறும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் இருக்கும். குழந்தைகளின் படிப்பில் மந்தநிலை இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் இருக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர் சாதகமாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் இருந்து எதிரிகளின் தொல்லை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பொன்னும் பொருளும் வாங்கி சேர்ப்பீர்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.