Type Here to Get Search Results !

அதிபன் டிவியின் இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். Happy Pongal


வியாழக்கிழமை சார்வரி வருடம் தை மாதம் - 1ம் நாள் பொங்கல் பண்டிகை இன்று தமிழர் திருநாளாம் இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதும் சூரியனுக்கும், பிற உயிர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் நாள் இன்று.  

தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழர்கள் உலகின் எந்த மூலையில் வசித்தாலும் அங்கெல்லாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போல எந்தவொரு மதம் சார்ந்த பண்டிகையாக இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கலை பார்க்கப்படுவதில்லை. தமிழரின் திருவிழா இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கல், பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது.


சூரியன் மகரம் ராசிக்கு பயணிக்கும் நாள் தை திருநாளாக கொண்டாடப்படுகிறது. நீர் வளம் கொண்ட இடங்களில் முப்போகமாக விவசாயம் நடைபெறும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீரை அடிப்படையாகக் கொண்டும், மழையின் நீரைத் தேக்கிவைத்தும் ஒரு போகம் விவசாயம் நடைபெறும்.  எனவே நாடு முழுவதும், மார்கழி மாத அறுவடையே நடைபெறும் என்பதால், இந்த சமயத்தில் இந்தியா முழுவதுமே வெவ்வேறு பெயரால் அறுவடைத் திருநாளக இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

அறுவடை முடிந்து கிடைத்த புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு) போன்றவையே படையலாக படைக்கப்படும்.

இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கல் விழா, தமிழர் தேசிய விழாவாக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் சாதி,மத பேதம் இல்லாமல் பொங்கலை கொண்டாடுகின்றனர். கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் இஸ்லாமியக் குடும்பங்களில் பொங்கலன்று இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கலை சர்க்கரைப் பொங்கல், நாட்டுக் காய்கறிகளைச் சமைத்து சாப்பிடும் பழக்கமும் பல இடங்களில் உள்ளது. 

அனைவருக்கும் அதிபன் டிவியின் இந்துக்களின் பாரம்பரிய தமிழர் திருநாள் பொங்கலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். மீண்டும் அதிபன் டிவியின் இந்துக்களின் பாரம்பரிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.