Type Here to Get Search Results !

தைத் திருநாளில் நம் வீட்டில் எந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் - Happy Pongal

 


தமிழ்நாட்டில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் தை முதல் நாள் கொண்டாடப்படும். முதலில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் பொங்கல் விழா நடைபெறும். தைத்திருநாளில் முதலில் நாம் சூரியனைப் பார்த்து பொங்கலை வைத்து உற்சாகமாக கொண்டாடும்.

இந்த நாளில் புது பானையில் அரிசி, வெல்லம் இட்டு பொங்கல் வைத்து சூரியனை வழிபடுவோம். இரண்டாவது நாள் விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் நாள். மாடுகளை அலங்கரித்து, வண்ணம் பூசி பொங்கல் வைத்து படைப்பார்கள்.

மூன்றாவது நாள் உறவினர்களைக் கண்டு மகிழும் நாள். தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய தினங்களில் எந்தெந்த நேரத்தில் பொங்கல் வைக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பொங்கல், ஜனவரி 14:

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

காலை 10:30 மணி முதல் 12 மணி வரை

மாட்டுப்பொங்கல், ஜனவரி 15:

காலை 9 மணி முதல் 10 மணி வரை

காலை 11:05 முதல் பகல் 1 30 மணி வரை

காணும் பொங்கல் ஜனவரி 16:

காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

காலை 10:30 மணி முதல் 12 மணி வரை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.