Type Here to Get Search Results !

திருப்பதிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து அதற்கேற்ப தரிசனத்திற்கு வர வேண்டும்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ...



 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து அதற்கேற்ப தரிசனத்திற்கு வர வேண்டுமென தேவஸ்தானத்தை சேர்ந்த தலைமை அதிகாரி அனில்குமார் சிங்கால் வேண்டுகோள் விடுத்தார்.



கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிமுறைகளையொட்டி பல்வேறுகட்ட தளர்வுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. திருப்பதியிலும் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் ஆன்லைன் மூலமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஒவ்வொரு வெள்ளியும் பக்தர்கள் குறைகேட்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். தற்போது 4 மாதங்களுக்கு பின் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடத்தப்பட்டது. அப்போது பல அதிகாரிகளும் கலந்து கொண்டு பேசினர்.



இது தொடர்பாக தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறுகையில், திருப்பதி கோவிலில் அரசு விதிகளின் படி, பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பதி மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் , மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. தேவஸ்தானத்தின் மீது சிலர் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புகின்றனர். தேவஸ்தான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது முற்றிலும் தவறானது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு பகுதிகளிலும் லட்டு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.



மூலப்பொருட்களின் உயர்வால் சிறிய லட்டு தயாரிக்க 45 ரூபாய் செலவாகும். ஆனால் பக்தர்களுக்கு ரூ.25 வீதம் கொடுக்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால் சுவாமியை தரிசிக்க இயலாதவர்களுக்கு லட்டு பிரசாதமாவது சென்றடையவே இவ்வாறு ஏற்பாடுகளை செய்துள்ளோம். அதன்படி, 22 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டது. ஜூன் 11 முதல் ஆன்லைன் மூமாகவும் கவுன்டர்கள் மூலமாகவும் என மொத்தம் 6 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 க்கான சிறப்பு டிக்கெட் ஜூன் 30 வரை முடிந்து விட்டது. ஆகவே, வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், திருப்பதிக்கு வர விரும்பினால், இருமாநிலங்களிலும் விசாரித்து, இ-பாஸ் பெற்று முன்பதிவுசெய்து வர வேண்டும். டோக்கன்களை அதிகரிப்பது தொடர்பாக முடிவெடுத்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.