Type Here to Get Search Results !

அழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா ரத்து

latest tamil news


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 7ல் வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அழகரண் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,.

மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா இன்று (ஏப்.,25) கொடியேற்றத்துடன் துவங்கியது. ஊரடங்கால் மே 4ல் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சுவாமி பிரகாரம் உற்ஸவர் சன்னதியில் காலை 9:05 மணிக்கு மேல் 9:29 மணிக்குள் நடக்கிறது. இதை கோயில் இணையதளத்தில் பார்க்கலாம்.வைகையில் கள்ளழகர்மே 5ல் அழகர்கோவில் இருந்து புறப்படும் கள்ளழகர் மே 7ல் அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள வேண்டும்.



ஊரடங்கு காரணமாக இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: கள்ளழகர் புறப்பாடு,தல்லாகுளம் எதிர்சேவை, வைகையாற்றில் எழுந்தருளல், ராமராயர் மண்டகப்படி , தண்ணீர் பீச்சுதல், வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவில் எழுந்தருளல், தேனூர் மண்டபத்தில் நடைபெறும் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தல், ராமராயர் மண்டகப்படி தசவதார நிகழ்ச்சி, மைசூர் மண்கப்படி பூப்பபல்லக்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு மதுரை சென்று திரும்புவதற்கு இயலாத சூழ்நிலை உள்ளது.

latest tamil news


எனவே மண்டூக மகரிஷிக்கு சாபம் விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் நிகழ்ச்சி மட்டும் திருக்கோவில் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக வரும் மே மாதம் 8 ம் தேதி மாலை 4.30 மணி முதல் 5.00 மணி வரையில் நேரடி நிகழ்ச்சியாக www.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் பேஸ்புக்க மூலமாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.