Type Here to Get Search Results !

ஆற்றில் அழகர் இறங்குவாரா? காத்திருக்கிறது கோயில் நிர்வாகம்

kallazhagar


மேலூா்: மதுரையில் சித்திரைத் திருவிழாக்களை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் நிர்வாகம் ரத்து செய்துவிட்ட நிலையில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்க வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுமா?
வைகையில் கள்ளழகா் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் இந்தச் சித்திரைத் திருவிழா வைபவம் தொடா்பாக ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உத்தரவுக்காகக் கோயில் நிா்வாகம் காத்திருக்கிறது.
சித்ரா பெளா்ணமி நாளில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகா்கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் கள்ளழகா் திருக்கோலத்தில் ஆண்டுதோறும் எழுந்தருளுவார்.
இவ்வைபவத்தில் பங்கேற்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களில் இருந்து திரண்டு வருவாா்கள்.
அழகா்கோவிலில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரை வரும்  கள்ளழகரை வழிநெடுக ஆயிரக்கணக்காணோா் திரண்டுவந்து வரவேற்பாா்கள்.
இந்நிகழ்வுகளுடன் மதுரையில் சுமாா் 405 இடங்களில் திருக்கண் மண்டபங்கள் அமைக்கப்பட்டு கள்ளழகருக்கு வரவேற்பு அளிக்கப்படும்.
இதற்காக, ஏப்ரல் 23-ம் தேதி மதுரை தல்லாகுளத்தில் பந்தல் கால்கோள் விழாவும் அழகா்கோவிலில் இருந்து மே 5-ம் தேதி தங்கப்பல்லக்கில் கள்ளழகா் மதுரை புறப்பாடும், மே 7-ம் தேதி மதுரை வைகை ஆற்றில் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகா் எழுந்தருளலும் நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் நிா்ணயித்திருந்தது.
பத்து நாள்கள் வண்டியூா் வீரராகவப்பெருமாள் கோயில் எழுந்தருளல், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம், நாரைக்கு முக்தியளித்தல், தசாவதாரக் காட்சியருளல் என பல்வேறு நிகழ்வுகள் முடிந்து அழகா் மலைக்கு பூப்பல்லக்கில் திரும்புவாா்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவுடன் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது மே 3-ம் தேதிவரை இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஒரு மீட்டா் இடைவெளியைப்  பின்பற்றவும் மக்கள் கூட்டம் கூடுவதைக் கண்டிப்பாக தவிா்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை அருள்மிகு மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கோயில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் ரத்துசெய்யப்பட்டு ஆகமவிதிப்படி நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அழகா்கோவில் சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் நடைபெறுவது குறித்து விசாரித்தபோது, மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு மே 3-இல் முடிந்துவிட்ட போதிலும், லட்சக்கணக்கானோா் மதுரையில் திரண்டு வரும் திருவிழாவை அனுமதிப்பது சாத்தியமா என்பது தெரியவில்லை.
மேலும், மீனாட்சி - சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழாவுடன் இணைந்த்தாகவே கள்ளழகர் திருவிழாவும் நடைபெறும்.
மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், ஹிந்துசமய அறநிலையத் துறை ஆணையா் வழிகாட்டுதலுக்காகக் கள்ளழகா் திருக்கோயில் நிா்வாகம் காத்திருப்பதாகத் தெரிகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.