Type Here to Get Search Results !

தஞ்சை பெரிய கோவிலில் யாகசாலை பூஜைகள் - பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை

தஞ்சை பெரிய கோவிலில் 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழுங்க, 80 ஓதுவார்கள் திருமுறை மந்திரங்கள் பாட விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை கோலாகலமாக தொடங்கியது.



உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு வருகிற 5ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது. இதில்,  விக்னேஸ்வர பூஜையுடன் முதல் கால யாக சாலை தொடங்கியது.
22 ஆயிரம் சதுர அடியில் பெருவுடையார், பெரியநாயகி, பரிவார தெய்வங்களுக்கு தனித்தனியாக யாகசாலை பந்தல் அமைக்கப்பட்டு அதில் 22 வேதிகைகளும், 110 குண்டங்கள் அமைக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, 80 ஓதுவார்கள் திருமுறை, தேவராம் ஓதி யாகசாலை பூஜையை தொடங்கினர்.
இந்த யாக சாலை பூஜையில் நவதானியங்கள், பட்டு வஸ்திரங்கள், பழ வகைகள், 140 வகையான மூலிகைகளை கொண்டு பூஜை நடைபெற்றுது. இந்த யாக சாலை பூஜையில் திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில் குடமுழுக்கு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் கோவில் வளாகம், யாகசாலை அமைக்கப்பட்டு உள்ள இடம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், பொது மக்களுக்கு மருத்துவ வசதி, குடிநீர் வசதி , கூட்ட நெரிசல் இன்றி பாதுகாப்பாக குடமுழுக்கு விழாவினை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.