Type Here to Get Search Results !

ஆங்கில புத்தாண்டு எப்படி வந்தது உண்மை கதை

ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பினபற்றி வருவது 437 வருடங் களாகத்தான். அதற்கு முன்பு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வருடத்தின் முதல் நாள் மாற்றி அமைத்தனர்.44

2000 வருடத்துற்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் வருடத்தின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள்  காலத்தில், வருடத்துற்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் வருடத்தின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால், மார்ச் 25-ந் தேதியை வருடத்தின் முதல் தேதியாக கருதினர் என்ற ஓரு கருத்தும் கூறப்படுகிறது.

புத்தாண்டு  மாரச் மாதம் 1-ந் தேதிதான் பிறந்தது என்று கருதிய ரோமானியர்கள் அதையே வருடத்தின் முதல் நாளாகவும் கருதினர். ரோமானிய மன்னர்களில் கொஞ்சம் விவரமாக யோசித்த நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த வருடத்தை, கூடுதலாக இரண்டு  மாதங்களைச் சேர்த்து, ஒரு வருடத்துற்கு 12 மாதங்கள் என்றாக்கினார். அந்த முறைதான் இப்போதும் பின் பற்றப்படுகிறது. எனினும், ரோமானிய மன்னர்களிலேயே சிலர், பழையபடி வருடத்துற்கு 10 மாதம்தான். அதுவும் மார்ச் மாதம்தான் முதல் மாதம் என்று கூறிவந்தனர்.  பின்னர் அதே ரோமர்கள், முதல் இரண்டு  மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்களை இட்டனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை வருடத்தின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 வருடங்களுக்கு முன்னர், அதாவது கிரோக்களுக்கு முன்பு 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை வருடத்தின் முதல் நாள்  என்றனர்.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், மித்ரா பிறந்த நாளை இயேசு பிறந்த நாளக கூறும் டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். மித்ரா பிறந்த நாளை இயேசு பிறந்த நாளக கூறும் டிசம்பர் 25 ஆம் தேதியை இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் மித்ரா பிறந்த நாளை இயேசு பிறந்த நாளக கூறும் டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக 1582 ஆம் வருடங்கள் வரை நிடிந்தன, வருடத்தின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.

கிரோக்களுக்கு பின் 1582 ஆம் வருடம், 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் இது தவறு என்று உணர்த்து வருடத்தை ரத்து செய்தார். அதன் பிறகு பூமியே சுற்றி வருதற்க்கு 365 நாட்கள் ஆகும் என்பதை சங்காலத்தில் குறித்தை அறிவியல் பூர்வமான உண்மைகள் உண்டு என்று உணர்ந்தர் அதன் பிறகு, நான்காண்டுகளுக்கு ஒரு வருடம் லீப் வருடம் என்று கூறி, அந்த வருடம் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கியார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரியன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறைப்படி, வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 437 வருடங்களாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் வருடத்தின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.