Type Here to Get Search Results !

துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்




1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை   தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை   நீங்கி செல்வ நிலையில் உயர்வு உண்டாகும்.

2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய
ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம்  ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும்  வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.
3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள்  நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
ஆண்கள் – சனிக்கிழமை
பெண்கள் – வெள்ளிக்கிழமை

4.பொருளாதாரம் உயர:-
ஞாயிற்றுக்கிழமையும் பூசம்  நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில்  நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில்  வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில்  நனைத்து அந்தத் துணியால்  நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.

5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.
6.அடிக்கடி ஆபத்துகளைச்  சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.
7.அரச மரத்தின் அற்புத சக்தி :
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு  / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.

2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட  விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.
4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.
5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.