Type Here to Get Search Results !

வைகாசி மாத சிறப்பு

வைகாசி மாதம் என்றாலே நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதம் என்று கருதப்படுகிறது. சித்திரை மற்றும் கத்திரிக்காக தள்ளிப்போடப்பட்ட நல்ல நிகழ்ச்சிகளை வைகாசி மாதத்தில் செய்பவர்களும் உண்டு. 

வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும், வைசாகம் என்றும் அழைப்பார்கள். 

இந்த மாவதத்தில் வரும் விசாக நட்சத்திரம், ஞானச் சிறப்பு பெற்றது. சரவணப் பொய்கையில் முருகப் பெருமான் அவதரித்தது இந்தப் புனித நாளில்தான். இந்தத் திருநாளில் முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

ராமலிங்க வள்ளலார், வடலூரில் சத்தியஞான சபை என்னும் அமைப்பைத் துவக்கி வைத்து, தர்ம சாலையில் ஏற்றி வைத்த ஜோதி இன்னமும் ஒளிவிட்டப் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் ஒரு வைகாசி மாதத்தில்தான்.

புத்த‌ர் அவதரித்ததும் வைகாசி மாத பெளர்ணமியன்றுதான். 

வைகாசியில் தானம் செய்வது மிகவும் பலனுண்டு. தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வெளிப்பட்டது வைகாசி மாத ஏகாதசியன்று. இறைவன் அதைக் காத்தது துவாதசியன்று. தேவர்கள் அமுதத்தை உண்டது த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில்.

எனவே வைகாசி மாதத்தில் வரும் ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி, பெளர்ணமி தினங்களில் செய்யப்படும் தானத்திற்கு ஒன்றிற்குப் பலவாக பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகப் பெருமை

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமாள் அவதரித்தார்.

வைணவப் பெரியவர் நம்மாழ்வார், ஆழ்வார்திருநகரி என்ற தலத்தில் விசாக நாளில் அவதரித்தார்.

ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பில் மறைந்திருக்கும் அகோபிலம் நரசிங்கமூர்த்தி, வைகாசி விசாகத்தில்தான் சந்தனக் காப்பைக் களைந்து விக்கிரக உருவத்தில் காட்சி தருவார்.

அதன்பின் அடுத்த வைகாசி விசாகத்தில்தான் நரசிங் மூர்த்தியை முழுமையாக மீண்டும் தரிசிக்க முடியும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.