Type Here to Get Search Results !

ஆஞ்சநேயர் யார் ?




    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கருடாழ்வாரை பெரிய திருவடி என்று அழைப்பார்கள் அதே போலவே ஆஞ்சநேயருக்கும் சிறிய திருவடி என்ற சிறப்பு பட்டம் உண்டு ராம அவதாரத்தில் பகவானுக்கு தொண்டு செய்து தாசானுதாசனாக வாழ்ந்ததனால் இந்த சிறப்பை அனுமன் பெறுகிறார்

               அத்தகைய அனுமன் சிவ அம்சம் பொருந்தியவர் என்பது அதியசயமான உண்மையாகும் திரேதா யுகத்தில் குஞ்சரன் என்ற மகாசிவபக்தன் வாழ்ந்தான் அவனுக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லை குழந்தைவரம் வேண்டி அதுவும் ஆண் குழந்தை வேண்டுமென்று சிவபெருமானை நோக்கி அவன் கடுதவம் மேற்கொண்டான்

         குஞ்சரனின் தவத்தை மெச்சிய கைலாச நாதன் அவன் முன்னால் தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் தனக்கு அழகான ஆண்குழந்தை வேண்டுமென்று அவன் சொன்னான் அதற்கு சிவபெருமான் உனது கர்மப்படி ஆண்குழந்தை பெறுகின்ற பாக்கியம் உனக்கில்லை ஆனால் மகாபதிவிரதையாக ஒரு மகளை பெறுவாய் அவள் மூலம் என் அம்சத்தில் உனக்கொரு பேரன் பிறப்பான் என்று வரம் கொடுத்தாராம்

              குஞ்சரன் மிகவும் சந்தோசபட்டான் குழந்தை இல்லையே என்று வருந்துவதை விட பிள்ளை கலி தீர்க்க பெண் குழந்தையாவது பிறக்கட்டுமென்று தவத்தை முடித்து வீட்டுக்கு போனான் அவனுக்கு சில நாளில் அஞ்சனா என்ற அழகான மகள் பிறந்தாள்

     கன்னிபருவம்' எய்திய அஞ்சனா தேவி கேசரி என்ற வானர வீரனை காந்தர்வ முறையில் மணம் முடித்தாள் அஞ்சானா தேவி முன் குறத்தி வடிவாக வந்த தர்மதேவதை திருவேங்கட மலைக்கு சென்று தவம் செய் அதன் பயனாக தேஜசும் வீரியமும் நிறைந்த மகன் பிறப்பான் என்று சொன்னாள்

                அஞ்சனா தேவியும் திருமலை சென்று தனது தவத்தை துவங்கினாள் பக்தி சிரத்தையோடு அவள் செய்த தவம் வாய்வு பகவானுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவள் தவத்திற்கு தன்னால் முடிந்த உதவி செய்யவேண்டும் என்று விரும்பி தினசரி ஒரு பழத்தை அவள் அறியாமல் அவள் முன்னால் வைத்து போனான் ஒருநாள் சிவபூஜைக்காக வைத்திருந்த பழம் ஒன்றை எடுத்து அவள் இருந்த இடத்தில் வைத்து விட்டான்

     கண்விழித்து பார்த்த அஞ்சானா தேவி தன்முன்னால் இருந்த பழத்தை வணங்கி சாப்பிட்டாள் அப்போதே அவள் கர்பவதியானாள் சிவனுக்கான பழம் என்பதனால் சிவ அம்சத்தோடும் வாயு பகவான் அதை கொடுத்ததினால் வாயு புத்திரனாகவும் அஞ்சனா தேவிக்கு பிறந்த அனுமான் கருதபடுகிறார்

       எனவே ஆஞ்சநேயர் சைவ வைஷ்ணவ ஒற்றுமை சின்னம் என்றே கருததக்கவர் ஆவார் அவரை பக்தியோடு வணங்கினால் பக்தர்கள் வேண்டி விரும்பி கேட்கும் நியாயமான கோரிக்கைகள் எதை வேண்டுமென்றாலும் நிறைவேற்றி வைப்பார்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.