Type Here to Get Search Results !

காளி தேவி தீட்சை பெற முதலில் ......

 

         முதலில் உடலை கட்ட வேண்டும், நீங்கள் செய்த சாண விபூதி கையிலெடுத்துக் கொண்டு வடக்கு முகம் இருந்துக்கொண்டு ஓம் பகவதே ஓம் காளியே என்றே தேகத்தில் பஞ்சாக்ஷர மூர்த்தி காவல், பாதம் வரை அஷ்ட தேவன்மாரும் ஓம் என்ற அக்ஷரமும், காதில் வீரபாத்திரதேவனும், துவாரத்தில் நவகிரகமும், என்னைச் சுற்றி கால வயிரனும் காத்து இரட்சிக்க, இந்த மந்திரத்தை பூஜை செய்யும் அமர்ந்து கொண்டு, ஏழு தரம் சொல்லி, விபூதியைத் தன்னைச்சுற்றிலும் போட்டுக்கொண்டால் வேறெந்த எந்த துஷ்ட தேவதையும் மந்திரவாதி என்ன செய்தாலும் அது நம்மிடமணுகாது.

பின்னர் காளி தேவியே மனத்தினால் தியானித்து.

 "ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"

இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் (காலை 4.30 மணிக்கும், 12.30 மணிக்கும், 6.00 மணிக்கும்) ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான பூஜை அறையில் இருந்து ஏழு நாள் 1008 உரு செபிக்க வேண்டும்.

பின்குறிப்பு : ஸ்ரீகள் முகம் பார்க்கப்படாது. ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும். இந்தப்படி சுத்தமாயிந்து ஜெபிக்கச் சித்தியாகும்.

முறையாக தீட்சை பெற வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.