Type Here to Get Search Results !

கலியுக வரலாறு

     கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள்  ஆட்சியில் இருப்பார்கள் என்கிற விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார், பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான் பரிவாக சனமேசெயன் முந்நூறுண்டான் இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன் இரண்டு நூற்றெண்பத்தெட்டாக ஆண்டான். 

        செழிப்பாக சாரங்கன் எண்பத்தைந்து செக் முழுவதும் விக்கிரமாதித்த வேந்தன், வேந்தனவன் இரண்டாயிரம் ஆண்டதப்பால்வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது ஆண்டு அகிலம் அரசுரிய செஙகோலச்சஎந்துகங்குல் நற்போசன் ஐநூறு ஆண்டான், சுப்பராயலு அறுநூற்றுத் தொண்ணூற்றைந்து போந்தவே கர்த்தாக்கள் எண்பத்தைந்து பிறை இசுலாம் அறுபத்திரண்டாண்டு சந்திரரேகை, ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன் ஒது அந்த பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன் பெருமாவ்வுடன் எழுபத்து மூன்றதாண்டு பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன் கருமையில் வெள்ளை நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து தொண்ணூற்றாறாதாண்டு வறுமை செய்து ஆண்டபின் இது குலத்தான் வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன் தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்.

      துறை தவறா, முறை பிசகா திருந்து ஓங்கும் மேன்மைபெற இது கடந்த நாள் தூய ஆன்ம நலம் அறிந்த கிள்ளுநமக்காரர் அகில சக்கர கொடியுடனே அழிமல் பான்மையுடன் அரசாள நான்மட்டல்ல பகரவில்லை, சிவனேந்திர மாமுனியும் சொன்னார், சந்திர ரேகை இந்த பாடல்களின்படி பாரத தேசத்தை ஆட்சி செய்தவர்களின் பெயரையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டால்………. ஆட்சியாளர்கள் ஆண்டு பரீட்சித்து மன்னன் 500 சனமேசெயன், 300 நரேந்திரன், 288 சாரங்கள், 85 விக்கிரமாதித்தன், 2000 சாலிவாகனன், 349 போசனராசன், 500 சுப்பராயலு, 695 கர்த்தாக்கள், 85 இசுலாமியர்கள், 62 பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன், 73 பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன், 96 பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன், 40 இதன் பின்னர் கிள்ளு நாமக்காரர் கலி முடியும் வரை ஆட்சி செய்வார் என்கிறார், 
    
     இந்த பட்டியலில்……..“ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன் ஒது  அந்த பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்“ 73 ஆண்டுகள் “ இவன் சார்புற்றோன் கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து வறுமை செய்து ஆண்டபின்“ 96 இது குலத்தான் வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன் 40 ஆண்டுகள் இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிகாலம், ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக் கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள் என்று கோரக்கர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை எல்லோருக்கும் தெரிந்ததே, கோரக்கர் கூறியுள்ள கணக்கின்படி,இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கலியுகத்தின் வயது 5049 ஆண்டுகளாகும், கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர் என்பது அநேகமாய் மகாத்மா காந்தியையும், அகிலச்சக்கர கொடியுடனே என்பதை அசோகச்சக்கரம் பொறித்த இந்தியக் கொடி என்பதாக அனுமானிக்கலாம்.

     இந்தச் எதிர்வு கூறல்களை தான் மட்டுமல்லாது சிவனேந்திர மாமுனியும் சொல்லியுள்ளார் என்று கோரக்கர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது, ஆக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல், சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும் அதாவது ஜனுநாயக ஆட்சி முறையில் ஆள்வர் என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான செய்தி, போக்கர் பூமிக்கு திரும்ப வரும் தினம் பற்றிய விவரங்களைக் கூட தனது நூலில் கோரக்கர் விவரித்திருக்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.