Type Here to Get Search Results !

வாஸ்து பகவானை வணங்கலாமா ?




வாஸ்துவும் தேவர்களும்
      வாஸ்து புருஷன் வடகிழக்கு மூலையில் தலையை வைத்துக் குப்பறக் கவிழ்ந்து படுத்து இருப்பான். அப்படி படுத்துள்ள அவனின் பாக்த்து அவயங்களைப் பிடித்து உள்ள தேவர்களைஇனி அறிவோம்.
அவன் தலையை அக்னியும். முகத்தை ஆபஸ்கனும், வலது ஸ்தனத்தை அர்யமாவும் பிடித்து உள்ளனர். வலது கண்ணை பர்ஜன்யனும், வலது காதை ஜயந்தனும், வலது மார்பை இந்திரனும், வலது தோள் படடையை சூரியனும் பிடித்து உள்ளனர்.
வலது தோளை சத்யன், பரிசன் அந்தரிகூஷன், வாயு, பூஷா – ஆகிய ஐந்து தேவர்களும், வலது கையை ஸாவித்ரன், ஸவிதா – ஆகிய இரண்டு தேவர்களும், வலது பார்சுவத்தை பித்ரன், பிரத்கூஷன் – என்ற இரண்டு தேவர்களும் பிடித்துள்ளனர்.
        வயிற்றை விவஸ்வானும், வலது தொடையை எமனும், வலது முழங்காலை கந்வர்வனும், வலது கணுக்காலைப் பருங்கிராஜனும், வலது குண்டியை ம்ருகனும் பிடித்துள்ளனர். இதயத்தை ஆவவஸ்தனும், பிரம்மாவும் இருபுறமும் பிடித்துள்ளனர். இந்திரன், ஜயந்தன் இரு தேவர்களும் ஆண் குறியை பிடித்துள்ளனர். பாதங்களைப் பிதுர்த் தேவர்களும் பிடித்துள்ளனர்.
      இனி, இடது பாகத்து அவயங்களை பிடித்துள்ள தேவர்களை அறிவோம். இடது ஸ்தனத்தை பருத்வீதரனும், இடது கண்ணை திதியும், இடது காதை அதிதியும், இடது மார்பை புஜங்கம், இடது தோள் பட்டையை சோமனும், இடது புறத்தைப் பல்லாடன், முக்யன், அஜன், உரோகன், பாபய க்ஷஷ்மன் – இந்த ஐந்து தேவர்களும் பிடித்துள்ளனர்.
      இடது கையை ருத்திரன், ராஜயக்ஷஷ்மன் இவர்களும், இடது பார்சுவத்தை சோஷன், அஸீரன் இவர்களும் இடது பக்கத்தை மித்திரனும், இடது தொடையை வருணனும், இடது முழங்காலை குஸீமத்தனும், இடது கணுக்காலை சுக்ரீவனும், இடது பிருஷ்டத்தை தௌவாரிகனும் பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.