Type Here to Get Search Results !

வாஸ்து சாஸ்திர விதிகள்

வாஸ்து சாஸ்திரம் என்பது ஒவ்வொரு மனித வாழ்வின் வெற்றிக்கும் அடித்தளமாக விளங்கக்கூடிய ஒன்றாகும். வாஸ்து விதிகளின் படி ஒரு வீடோ/ தொழிற்சாலையோ அமைக்கப்படும் பொது அங்கு இருக்ககூடிய அனைவருக்கும் எப்பொழுதும் நல்ல ஆற்றலே இருக்கும். என்றும் மன அமைதி , உடல் நலம், செல்வா செழிப்போடு காணப்படுவர். வாஸ்து என்றால் நான்கு திசை மற்றும் நான்கு மூலைகள் கொண்டே கருதப்படுகின்றன. அவை, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு. மேலும் நான்கு மூலைகள் வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தென்மேற்கு ஆகும். இவற்றை கொண்டு வாஸ்துவில் அடிப்படையாக கருதப்படும் ஆறு மிக முக்கியமான பொதுவான விதிகள்.
வாஸ்து பொதுவான விதிகள்
  • மனை மற்றும் அதனுள் கட்டப்படும் கட்டிடம் இரண்டும் சதுரம் அல்லது செவ்வகமாக  இருக்க வேண்டும்.
  • வடக்கு மற்றும் கிழக்கில் அதிக காலி இடம் இருத்தல் அவசியம்.
  • தலைவாசல் என்றுமே உச்சத்தில் தான் அமைக்கப்பட வேண்டும்.
  • தெருதக்கமும்(தெருகுத்து) உச்சமாக தான் இருக்க வேண்டும்.
  • உட்புறம் மற்றும் வெளிப்புறம் போடப்படும் படிக்கட்டுகள் அமைக்கப்படும் முறையை அறிவது அவசியம்.
  • வடகிழக்கு பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு உயரமாகவும் /கனமாகவும் இருத்தல் அவசியம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.