Type Here to Get Search Results !

வாஸ்து சாஸ்திரம் ஆதி இந்தியாவின் அரிய பொக்கிஷம்

   
    ஆதிகால கலையாகிய வாஸ்து ஞானத்தின் ஒரு பிரிவு. கல்வியுடன் அனுபவமும் நம்பிக்கையும் மிகுந்த இந்தியாவின் சிறந்த கலை. அதன் சக்தியும், விரும்பிய நன்மை அளிக்கும் திறமையும் உலகு அறிந்த ஒன்று. வாஸ்து சாஸ்திரம் பண்டைய இந்தியாவில் தோன்றியது. இதன் சிறப்பு, யாதெனில் உடல், மனது, ஆவி மூன்றும் உயர்வடையும். பொதுவான நோக்குடன் ஒரே மொழியில் உருவானது. இது தானாகவே மனிதனுக்கும், பஞ்சபூதங்களுக்கும் இடையே எல்லையை வரையறுத்து, நன்றாக திட்டமிட்டு வீடுகட்டுவது மிகவும் அவசியமானதாக ஆயிற்று. அவ்வாறு உருவாக்கப்பட்ட வாஸ்து சாஸ்திரம் தடைகளை அகற்றி பஞ்சபூதங்களை சரியான முறையில் கிரஹிக்க ஏதுவாக திட்டமிட்டு வீடு கட்டப்பட்டது.
வாஸ்து சாஸ்திரம் அழியாக் கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டு, சுற்றுச் சூழ்நிலைகளில் ஆனந்தமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது. இதனால் மனித உடல்நலம் பஞ்ச -பூதங்களின் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது என்பது எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இயற்கையின் நியதியோடு இணைந்து வாழ்வதாலும் வாஸ்து சாஸ்திர முறைப்படி கட்டப்பட்ட வீட்டில் வசிப்பதாலும் நடுநிலை நகலம் அடைய முடிகிறது. (பதினாறும் பெற்று பெருவாழ்வு பெறுதல்) உடல், மனது இவற்றை பாதிக்கும் காஸ்மிக் சக்தி இருப்பதை உறுதியாக கூறுகிறது. சுருங்கச் சொல்ல வேண்டுமாயின் வாஸ்து சாஸ்திரம் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்றது. இவ்விரண்டும் சரியான முறையில் செயல்படுத்தப்பட்டால் உடல், மனது நலம் காக்கும் வல்லமை உடையது என்பது உறுதி.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.