Breaking

6/trending/recent
Type Here to Get Search Results !

தின பலன்... Daily Horoscope in Tamil.... இன்று உங்கள் ராசி பலன்.... Rashi Palan...

 


பஞ்சாங்கம்  ~ சித்திரை ~ 20  

{03.05.2021}.- திங்கட்கிழமை

1.வருடம் ~ ப்லவ  வருடம். { ப்லவ நாம சம்வத்ஸரம்}.

2.அயனம் ~ உத்தராயணம் .

3.ருது ~ வஸந்த ருதௌ.

4.மாதம் ~ சித்திரை ( மேஷ மாஸம்).

5.பக்ஷம் ~ கிருஷ்ண  பக்ஷம்.

6.திதி ~ ஸப்தமி இரவு 07.36 PM. வரை. பிறகு அஷ்டமி  .

ஸ்ரார்த்த திதி ~ ஸப்தமி .

7.நாள்  ~ திங்கட்கிழமை {இந்து  வாஸரம்.}  ~                         

8. நக்ஷத்திரம் ~ உத்திராடம் பிற்பகல் 01.54 PM. வரை. பிறகு திருவோணம் .

யோகம் ~ பிற்பகல் 01.54 PM. வரை சரி இல்லை. பிறகு அமிர்த யோகம்.

கரணம் ~ பவம், பாலவம் .

நல்ல நேரம் ~  காலை 06.30 AM ~ 07.30 AM  & 04.30 PM ~ 05.30 PM.

ராகு காலம் ~  காலை 07.30 AM ~ 09.00 AM.

எமகண்டம் ~ காலை 10.30 ~12.00 PM. 

குளிகை ~ பிற்பகல் 01.30 ~ 03.00  PM.

சூரிய உதயம் ~ காலை 05.56 AM.

சூரிய அஸ்தமனம்  ~ மாலை 06.24 PM.

சந்திராஷ்டமம் ~ மிருகஸீர்ஷம் , திருவாதிரை .

சூலம் ~  கிழக்கு.

பரிகாரம் ~ தயிர். 

இன்று ~ திருவோண விரதம்  .

மேஷம்

மேஷம்: உறவினர்கள் நண்பர்கள் ஆதரவாகப்பேசத்தொடங்கு வார்கள். விஐபிகள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதித்துக் காட்டும் நாள்.


ரிஷபம்

ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மிதுனம்

மிதுனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள் உடனே உணர்ச்சி வசப்பட்டுவிடாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.


கடகம்

கடகம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


சிம்மம்

சிம்மம்: அரசால் அனுகூலம் உண்டு. உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.


கன்னி

கன்னி: உங்களை சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


துலாம்

துலாம்: திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். வியா பாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள் .வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். வெற்றிக்கு வித்திடும் நாள்.


தனுசு

தனுசு: குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கி ஒரு தெளிவு பிறக்கும். ஒரு அமைதியான சூழல் உருவாகும். செலவுகளை குறைக்க திட்ட மிடுவீர்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். உடல் நலம் சீராகும். வியாபா ரத்தில் இழந்ததை மீட்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மகிழ்ச்சியான நாள்.


மகரம்

மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்ப தால் தோல்வி மனப்பான்மை மன இறுக்கம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். விட்டுக்கொடுத்துப் போக வேண்டிய நாள்.


கும்பம்

கும்பம்: எதிர்காலம் பற்றிய பயம் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர் களால் பிரச்சினைகள் வரக்கூடும். விழிப்புடன் இருக்கவேண்டிய நாள்.


மீனம்

மீனம்:  எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட் டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். மதிப்புக் கூடும் நாள்.

Post a comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Below Post Ad