Type Here to Get Search Results !

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்?



அரியதோர் ஆன்மீக‌த் தகவலைத்தான் இங்கு படிக்க‍விருக்கிறீர்கள்.

கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன்.

அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான்.

அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.

புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது.

தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார் கள்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.

தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உண ர்ந்தார் நாராயணன்.

உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார்.

வந்திருப்பது நாராயணன் என்பதை மறந் தான்.

தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச் மாண்டன்.

சண்டைக்கும் தயாரானான்.

அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.

யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.

கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய்.

இது உன்பாவத்தின் சம்பளம்.

வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை.

எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியிட்டான்.

சரி கேள்… என்ன வரம் வேண்டும்?

நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.

இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?

பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம்.

இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும்.

அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.

சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய்.

உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும்.

கண் திருஷ்டி மறையும்.

பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது.

அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ……

அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.

அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.

கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது.

அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.